பேபாலுக்கு நிகராக சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக்
பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கட்டிப்போட்டிருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளமானது பாரிய விளம்பர சேவைகளையும் வழங்கிவருகின்றது.
இதனால் பணக்கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது
.
அதாவது ஒன்லைன் மூலமான பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு தற்போது பிரபல்யமாகக் காணப்படும் பேபால் நிறுவனத்தின சேவைக்கு நிகராக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மொபைல் சாதனங்களிலும் இச்சேவையை பயன்படுத்தக்கூடிய வசதி கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.