இரு புறமும் பார்வையிடக்கூடிய திரையினை அறிமுகம் செய்தது LG

LG நிறுவனமானது இரு புறமும் காட்சிகளை(Double Sided) உருவாக்கக்கூடிய திரையினை ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் இடம்பெற்ற IFA 2015 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. 
OLED (organic light-emitting diode) தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இத் திரையில் 281 சென்ரி மீற்றர், 139 சென்ரி மீற்றர் அளவுகளைக் கொண்ட இரு வகைகளை உருவாக்கியுள்ளது.
இதேவேளை இவற்றின் தடிப்பு 5.3 மில்லி மீ
ற்றர்களாக காணப்படுவதுடன், இந்த அளவானது iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியின் தடிப்பினை விடவும் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாதிரிகளை மட்டுமே அறிமுகம் செய்துள்ள LG நிறுவனம் விரைவில் விற்பனைக்கு விடக்கூடிய திரைகளை உருவாக்கவுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem