உலகமே உங்கள் அலுவலகமாக மாறவேண்டுமா? இதோ புதிய செயலி
அலுவலகம், வீடு தவிர பணியாற்றுவதற்குப் பொருத்தமான கச்சிதமான இடத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வழி காட்டும் செயலியாக ‘கியூப் ஃப்ரி’ உருவாகியிருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் எங்கெல்லாம் பொதுப் பணியிடங்கள் அல்லது பகிர்வுப் பணியிடங்கள் இருக்கின்றன என்பதை இந்தச் செயலி வரைபடம் மூலம் சுட்டி
க்காட்டுகிறது.
அந்த இடங்களின் தன்மை, அங்குள்ள வை-பை வசதியின் ஆற்றல் உள்ளிட்ட விவரங்களையும் தருகிறது.
மேலும், அங்கு பணிபுரியும் சக பணியாளர்கள் பற்றிய விவரங்களையும் அளித்து அவர்களுடன் தொடர்புகொள்ளவும் வழி செய்கிறது.