வாட்ஸ் அப் பயன்படுத்துறீங்களா? உங்கள் தகவல் திருடு போகலாம்

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பிரபல குறுஞ்செய்தி சேவையான வாட்ஸ் அப் பாவனையாளர்களின் தகவல்கள் திருட்டுப் போகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இச் சேவையினை மொபைல் சாதனங்களின் ஊடாகவும், இணைய உலாவியின் ஊடாகவும் பயன்படுத்த முடியும் என்பது தெரிந்ததே.
இவற்றுள் இணையத்தினூடாக வாட்ஸ் அப் சேவையினைப் பெற்றுவரும் சுமார் 200 மில்லியன் வரையான பயனர்களே இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக
லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேக்கர்களால் பரவ விடப்பட்டுள்ள மல்வேரே இவ் அச்சுறுத்தலுக்கு காரணம் எனவும், இது மொபைல் அப்பிளிக்கேஷன்களை தாக்காது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அச்சுறுத்தல் தொடர்பாக வாட்ஸ் அப் சேவை கடந்த மாதத்தின் இறுதி தினங்களில் எச்சரிப்புக்குள்ளாகியிருந்தது.
இதேவேளை குறித்த பாதிப்பிலிருந்து தப்பிக்கொள்வதற்கு ஏனையவர்களும் உடனடியாக தமது வாட்ஸ் அப் மென்பொருளினை அப்டேட் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?