ஸ்மார்ட் கைக்கடிகார விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டிய அப்பிள்

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு அடுத்த படியாக ஸ்மார்ட் கைக்கடிகார வடிவமைப்பில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறங்கியுள்ளன.
இவற்றில் மொபைல் சாதனங்களை வடிவமைத்து தொழில்நுட்ப உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள அப்பிள் நிறுவனமும் காலடி பதித்துள்ளது.
இதன்படி அந் நிறுவனம் இரண்டாம் கலாண்டுப் பகுதியில் சுமார் 3.6 மில்லியன் ஸ்மார்ட் கடிகார விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் அப்பிள் நிறுவனத்தினால் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.
4.4 மில்லியன் வரையான ஸ்மார்ட் கடிகாரங்களை குறித்த காலப் பகுதியில் விற்பனை செய்த Fitbit நிறுவனம் முதலாம் இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை iPhone மற்றும் iPad சாதனங்களை விடவும் தமது ஸமார்ட் கடிகார விற்பனையில் அதிகரிப்பு காணப்படுவதாக அப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் Tim Cook என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem