விரைவில் பேஸ்புக்கில் வருகிறது Dislike பட்டன்


பேஸ்புக்கில் Like பட்டனை போன்று விரைவில் Dislike பட்டம் அறிமுகம் செய்யப்படும் என அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பேஸ்புக் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க் ஸக்கர்பெர்க் கூறுகையில், பேஸ்புக்கில் Like பட்டனை போன்று Dislike பட்டனும் வேண்டும் என பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சோக நிகழ்வுகள், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் போது Like பட்டன் பொருத்தமாக இல்லை, எனவே Like பட்டனை தாண்டி உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விரைவில் பட்டன் அறிமுகம் செய்யப்படும்.
சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?