பேஸ்புக் தரும் அதிரடி வசதி
முன்னணி சமூகவலைத்தளமாகத் திகழும் பேஸ்புக் ஆனது தற்போது பல்வேறு துறைகளிலும் தனது சேவையைப் பரப்பிவருகின்றது.
இவற்றின் வரிசையில் தற்போது உண்மை போன்ற மாயைக் காட்சிகளைக் கொண்ட தொழில்நுட்பத்தினை உருவாக்கிவரும் Oculus VR நிறுவனத்துடன் இணைந்து 360 டிகிரி வீடியோ காட்சிகளை தனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளது.
இச் சேவையானது கூகுளின் Stree
t View சேவைக்கு ஒப்பானதாகக் காணப்படுகின்றது.
தற்போது டெக்ஸ்டாப் கணினிகளில் உள்ள இணைய உலாவிகளில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் இவ் வசதியானது விரைவில் iOS மற்றும் Android சாதனங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.