நவீன வடிவமைப்புடன் LG Class
LG நிறுவனமானது LG Class எனும் சாதாரண ஸ்மார்ட் கைப்பேசிகளுக்குரிய அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.
இச் சாதனம் முதன் முறையாக Unboxing செய்யப்படும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக் கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2050 mAh மின்கலம் என்பனவற்றினையும் கொண்டுள்ளது.