இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Angry Bird திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

படம்
பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டு ஹேம் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்த Angry Bird ஹேமினை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் Angry Bird 2 வெளிவந்து பலத்த வரவேற்பைப் பெற்ற நிலையிலேயே இத் திரைப்படம் தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

நவீன வடிவமைப்புடன் LG Class

படம்
LG நிறுவனமானது LG Class எனும் சாதாரண ஸ்மார்ட் கைப்பேசிகளுக்குரிய அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது. இச் சாதனம் முதன் முறையாக Unboxing செய்யப்படும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Samsung S Health அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியீடு

படம்
S Health என்பது சம்சுங் நிறுவனத்தினால் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அப்பிளிக்கேஷன் ஆகும். தற்போது இந்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பான S Health 4.5 இனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்பதிப்பில் Dashboard ஆனது நாள்தோறும் இடம்பெறும் செயற்பாடுகள் மற்றும் இலக்குகள் தொடர்பாக விரைவான தரவுகளைத் தரக்கூடியவாறு மேம்ப

பேஸ்புக் தரும் அதிரடி வசதி

படம்
முன்னணி சமூகவலைத்தளமாகத் திகழும் பேஸ்புக் ஆனது தற்போது பல்வேறு துறைகளிலும் தனது சேவையைப் பரப்பிவருகின்றது. இவற்றின் வரிசையில் தற்போது உண்மை போன்ற மாயைக் காட்சிகளைக் கொண்ட தொழில்நுட்பத்தினை உருவாக்கிவரும் Oculus VR நிறுவனத்துடன் இணைந்து 360 டிகிரி வீடியோ காட்சிகளை தனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. இச் சேவையானது கூகுளின் Stree

Firefox உலாவியில் இனி நேரடியாக சட் செய்யலாம்

படம்
Mozilla நிறுவனம் இம்மாதம் தனது Firefox உலாவியின் 41வது பதிப்பினை அறிமுகம் செய்கின்றது. இப் புதிய பதிப்பில் Firefox Hello எனப்படும் உடனடி குறுஞ்செய்தி சேவையினை வழங்குகின்றது. Firefox Account வைத்திருக்கும் பயனர்கள் இப் புதிய வசதியினைப் பயன்படுத்தி உலாவியில் இருந்தவாறே நேரடியாக ஏனையவர்களுக்கு குறுஞ்செய்திக

Huawei அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

படம்
கைப்பேசி விற்பனையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள Huawei நிறுவனமானது விரைவில் Huawei Mate S எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் HiSilicon Kirin 935 Proc

விரைவில் பேஸ்புக்கில் வருகிறது Dislike பட்டன்

படம்
பேஸ்புக்கில் Like பட்டனை போன்று விரைவில் Dislike பட்டம் அறிமுகம் செய்யப்படும் என அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பேஸ்புக் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க் ஸக்கர்பெர்க் கூறுகையில், பேஸ்புக்கில் Like பட்டனை போன்று Dislike பட்டனும் வேண்டும் என பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இலவச Wi-Fi இணைப்பு வழங்கும் கூகுள்

படம்
உலகின் பல பகுதிகளிலும் வியாபித்திருக்கும் கூகுள் ஆனது தொடர்ந்தும் தனது சேவை எல்லைகளை அதிகரித்துவருகின்றது. தவிர வேறு பல நிறுவனங்களுடனும் இணைந்து தனது சேவையை விஸ்தரித்துவருகின்றது. இவற்றின் ஒரு பகுதியாக தற்போது இந்தியாவின் ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து சுமார் 400 இடங்களில் முற்றிலும் இலவசமான முறையில் Wi-Fi இணைய இணைப்பினை வழங்க முன்வந்துள்ளது.

விண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட விண்டோஸ் 8 அம்சங்கள்

படம்
தொடு உணர்திரை தொழில்நுட்பத்துடன் அறிமுகமாக விண்டோஸ் 8ல் ஒருசில வசதிகள் பயனர்களை எரிச்சலடைய செய்ததால், எதிர்பார்த்தபடி  வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பயனர்களின் பிரச்னைகளை அறிந்த மைக்ரோசாப்ட் தன் தவறுகளை உணர்ந்து, புதியதாக அறிமுகமான விண்டோஸ் 10 சிஸ்டத்தில், அதற்கான பரிகாரத்தை மேற்கொண்டது. எப்படியும், தன் பயனாளர்களைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் அனைத்து அம்சங்களையும் அலசி, பல வழிகளில் இந்த இலக்கினை அடைய, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை வடிவமைத்து அளித்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது Android Pay அப்பிளிக்கேஷன்

படம்
ஒன்லைன் மூலமாக தனது உற்பத்திகளை இலகுவாக கொள்வனவு செய்வதற்கு கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த வசதியே Android Pay ஆகும். அண்மையில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதியினை அன்ரோயிட் இயங்குதளங்களில் செயல்படும் மொபைல் சாதனங்களின் ஊடாக பயன்படுத்துவதற்குரிய அப்பிளிக்கேஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பிளிக்கேஷன் Android 4.4 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளங்களில் செயல்படக்கூடியதாக இருக்கின்றது

அதிகூடிய சேமிப்பு நினைவகத்துடன் Huawei அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி

படம்
Huawei நிறுவனமானது Nexus 6 எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் 29 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. LG நிறுவனத்தின் Nexus 5 கைப்பேசி வெளியாகும் அதே நேரத்தில் அறிமுகம் செய்யப்படும் இக்கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதாகவும், Octa Core Qu

உலகம் முழுவதும் தடைபட்ட ஸ்கைப் சேவை: சிரமங்களை எதிர்நோக்கிய பல கோடி வாடிக்கையாளர்கள்

படம்
இணையத்தளம் ஊடாக தொலைபேசி வசதிகளை வழங்கி வரும் ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளது. ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள பல கோடி பேர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஸ்கைப் சேவை செயலிழந்தது குறித்து முதன் முதலில் சமூக வலைத்தளங்களில் தான் செய்திகள் பரவின. பல வாடிக்கையாளர்களும் தங்களது தொடர்பில் இருப்பவர்களிடம் தகவல் பரிமாற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அந்த நிறுவனம் வீடியோ சேவை மட்டு

சாப்பிடும்போது செல்பி எடுக்க வேண்டுமா? வந்துவிட்டதா "செல்பி ஸ்பூன்"

படம்
செல்பி ஸ்டிக்கின் தாக்கம் மக்கள் மத்தியில் குறைந்துபோவதற்குள், செல்பி ஸ்பூன் எனும் புதிய சாதனம் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் ஆன, டோஸ்ட் கிரன்ச் இதை உருவாக்கியுள்ளது. சாப்பிடுவதை செல்பி எடுக்க முடியாமல் நிறைய பேர் தவிப்பதை நிறுத்தவே இந்த புதிய தயாரிப்பு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 30 இஞ்ச் வரை விரியக் கூடிய இந்த ஸ்பூ

வாகனங்களைக் கட்டுப்படுத்தும் நவீன அப்பிளிக்கேஷன்

படம்
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது மனிதர்களின் ஆரோக்கியத்தினை அதிகரிக்கும் ஸ்மார்ட் கைப்பட்டிகள் வரை எட்டிவிட்டது. இவ்வாறிருக்கையில் மேலும் ஒருபடி முன்னேறி ஸ்மார்ட் கடிகாரத்தின் உதவியுடன் வாகனங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கைப்பேசிகளுக்கான மின்கலங்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் அப்பிளிக்கேஷன்

படம்
சாதாரண கைப்பேசிகளை விடவும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் மின்கலங்களில் விரைவாக சார்ஜ் குறைந்து செல்கின்றமை அறிந்ததே. இதற்காக கூடிய Amh உடைய மின்கலங்கள் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்ற போதிலும் மின்கலங்களின் ஆயுட்காலத்தினை அதிகரிக்க மேலும் பல ஆய்வுகள் இடம்பெற்றுவருகின்றன. இவற்றின் ஒரு அங்கமாக அமெரிக்காவின் Purdue பல்கலைக் கழக ஆய்வாளர்கள் குறியீடுகளை (Code) கொண்ட அப்பிளிக்கேஷனின் ஒன்றினை வடிவ

Samsung அறிமுகப்படுத்தும் பையடக்கமான Galaxy J2

படம்
Galaxy வரிசையில் சட்டைப்பைக்குள் பொருந்தும் அளவில் புது கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளது Samsung இக் கைப்பேசியானது 4.7 அங்குல அளவு மற்றும் qHD 540 x 960 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாகவும், Exynos 3475 quad-core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM உட்பட 32 அல்லது 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்

புதிய வசதியுடன் வெளியாகும் ஆப்பிள் Siri

படம்
குரல் வழி கட்டளைகள் மூலம் ஆப்பிள் சாதனங்களை இயக்கும் வசதியினை தரும் அப்பிளிக்கேஷன் ஆன ஆப்பிள் Siri இன் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அண்மையில் பொதுப் பாவனைக்காக வெளியிடப்பட்ட iOS 9.1 பீட்டா பதிப்புடன் இணைத்து இந்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு குரல்களையும் இனம் கண்டு செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

உலகின் மிகச் சிறிய Drone விமானம்

படம்
Drone எனப்படும் சிறிய ரக விமானத்தின் கண்டுபிடிப்பானது பல்வேறு துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது உலகின் மிகச்சிறிய Drone விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. 2.2 சென்ரி மீற்றர் நீளம், 2.2 சென்ரி மீற்றர் அகலம் கொண்ட இந்த விமானத்தினை TRNDlabs நிறுவனம் வடிவமைத்துள்ளது. இரவு நேரங்களிலும் பறப்பி

எழுத்து வடிவில் நேரத்தை காண்பிக்கும் கடிகாரம்

படம்
இலக்க முறையினை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் கடிகாரம் மற்றும் முட்களின் அடிப்படையில் நேரத்தினைக் காண்பிக்கும் அனலொக் கடிகாரங்கள் தற்போது பாவனையில் உள்ளன. இவ்வாறிருக்கையில் எழுத்து வடிவில் நேரத்தினை காண்பிக்கக்கூடிய கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு இலக்கங்களுக்குமான ஆங்கில சொற்க

சூரிய வெளிச்சத்தின் மூலம் தானாகவே சார்ஜ் ஆகும் மின்கலங்கள்

படம்
சம காலத்தில் சூரிய வெளிச்சத்தினை மின் சக்தியாக மாற்றும் சூரியப் படலங்கள் பாவனையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. எனினும் இவ்வாறு மாற்றப்படும் மின்சக்தியை சேமிப்பதற்கு தனியான மின்கலங்கள் பயன்படுத்தப்படும். ஆனால் தற்போது சூரிய ஒளியைப் பயன்படுத்தி தானாகவே சார்ஜ் ஆகக்கூடிய lithium-Ion மின்கலங்களை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒளி ஊடுபுகவிடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மின்கலம் கடந்த மாதம் டோக்கியோவில் இடம்பெற்ற வர்த்தகக் கண்காட்சி ஒன்

பேஸ்புக்கில் நடக்கும் ஏமாற்று வேலை: உஷார்!

படம்
ஒரு சில பதிவுகள் நம்முடைய பேஸ்புக் பக்கத்தை தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.  அதிலும் இந்த பதிவிற்கு "1 என கமெண்ட் செய்யுங்கள், என்ன நடக்கிறதென்று பாருங்கள்" என்று வாசகங்கள் தாங்கிய இணைப்புகளை அதிகம் பார்த்திருக்கிறீர்கள். நீங்களும் ஆர்வத்தில் லைக் மற்றும் கமெண்ட் பொத்தான்களை கிளிக் செய்வீர்கள். ஆனால் எதும் நடக்காது. பின்னர் தான் நீங்கள் இது ஏமாற்று வேலை என்று உணர்வீர்கள். ஆனால் நீங்களும், உங்களைப் போன்றவர்களும் பலமு

வாட்ஸ் அப் பயன்படுத்துறீங்களா? உங்கள் தகவல் திருடு போகலாம்

படம்
உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பிரபல குறுஞ்செய்தி சேவையான வாட்ஸ் அப் பாவனையாளர்களின் தகவல்கள் திருட்டுப் போகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இச் சேவையினை மொபைல் சாதனங்களின் ஊடாகவும், இணைய உலாவியின் ஊடாகவும் பயன்படுத்த முடியும் என்பது தெரிந்ததே. இவற்றுள் இணையத்தினூடாக வாட்ஸ் அப் சேவையினைப் பெற்றுவரும் சுமார் 200 மில்லியன் வரையான பயனர்களே இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக

நவீன ரக Processor உடன் அறிமுகமாகவுள்ள Sony Xperia Z5 Ultra

படம்
Sony நிறுவனம் Xperia Z5 Ultra எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது. Qualcomm Snapdragon 820 Processor உடன் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியானது 6.44 அங்குல அளவு, 3840 x 2160 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 4GB RAM உள்ளடக்கப்பட்டுள்ளது.

இரு புறமும் பார்வையிடக்கூடிய திரையினை அறிமுகம் செய்தது LG

படம்
LG நிறுவனமானது இரு புறமும் காட்சிகளை(Double Sided) உருவாக்கக்கூடிய திரையினை ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் இடம்பெற்ற IFA 2015 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.  OLED (organic light-emitting diode) தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இத் திரையில் 281 சென்ரி மீற்றர், 139 சென்ரி மீற்றர் அளவுகளைக் கொண்ட இரு வகைகளை உருவாக்கியுள்ளது. இதேவேளை இவற்றின் தடிப்பு 5.3 மில்லி மீ

உலகின் அதிக வினைத்திறன் வாய்ந்த டிஜிட்டல் கமெரா

படம்
உள்ளங்கையில் அடங்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் பல்வேறு வினைத்திறன்கள் மற்றும் துல்லியம் வாய்ந்த கமெராக்கள் இணைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி இவ்வாறிருக்கையில் அமெரிக்காவின் எரிசக்தி துறையானது உலகிலேயே அதிக வினைத்திறன்

தொலைக்காட்சி பிரியர்களுக்கு உதவும் சம்சுங்கின் புதிய அப்பிளிக்கேஷன்

படம்
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் ஸ்மார்ட் கைப்பேசிகளைக் கொண்டே அதிகளவான மனித செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்காக அன்றாடம் பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக சம்சுங் நிறுவனம் SleepSense எனும் புதிய அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளது. இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இரவு நேரங்களில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ZTE அறிமுகம் செய்யும் Axon Elite ஸ்மார்ட் கைப்பேசி

படம்
பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக மொபைல் சாதனங்களை உருவாக்கும் ZTE நிறுவனம் Axon Elite எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. Octa Core Qualcomm Snapdragon 810 Processor இனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 3GB RA

மிகச் சிறந்த Video Converter இலவசமாக Free Make

படம்
சில மென்பொருட்கள் பணம் கொடுத்து வாங்கும் படி நிலைமை இருக்கும், ஆனால் நாம் எதிர்பார்க்கும் வசதிகள் எல்லாம் அதில் இருக்காது. ஆனால் இலவசமாக கிடைக்கும் சிலவற்றில் போதும் போதும் என்கிற அளவுக்கு வசதிகள் கிடைக்கும். அப்படி பட்ட ஒன்றும் தான் Free Make Video Converter. Converter என்ற ஒன்றைத் தவிர நிறைய பலன்களை கொண்டிருப்பது

லூமியா செயலிகளுக்கு பை பை சொல்லும் மைக்ரோசொப்ட்

படம்
விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதற்காக லூமியா செயலிகளை நிறுத்த இருப்பதாக மைக்ரோசொப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 10 கமெரா மற்றும் போட்டோ செயலிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லூமியா செயலிகளை நிறுத்தவுள்ளது. எனினும் மொபைல்களில் இருக்கு

கூகுள் குரோமின் புதிய பதிப்பில் அதிரடி வசதி

படம்
உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இணைய உலாவியான கூகுள் குரோமின் 45 வது பதிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இப்புதிய பதிப்பில் பல மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், முக்கியமாக பயன்படுத்தப்படாத டேப்களிற்கான (Tabs) மெமரி பயன்பாட்டினை தானாகவே குறைத்துக்கொள்ளக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!

படம்
இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா. ஸ்கிரீன் லாக்!

PDF File-களை Firefox-இல் ஓபன் செய்வது எப்படி?

படம்
பெரும்பாலோனோர் படிக்க எளிதாய் இருக்க தங்களது கோப்புகளை PDF Format-இல் வைத்து இருப்பார்கள். ஆனால் ஏதேனும் புதிய கணினி அல்லது PDF Reader இல்லாத கணினிகளில் அவற்றை திறக்க முடியாமல் சிரமப்படுவார்கள். உங்களிடம் Firfox Browser இருந்தால் இனி நீங்கள் எளிதாக அதில் PDF File – ஐ ஓபன் செய்யலாம். 

ஸ்மார்ட் கைக்கடிகார விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டிய அப்பிள்

படம்
ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு அடுத்த படியாக ஸ்மார்ட் கைக்கடிகார வடிவமைப்பில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறங்கியுள்ளன. இவற்றில் மொபைல் சாதனங்களை வடிவமைத்து தொழில்நுட்ப உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள அப்பிள் நிறுவனமும் காலடி பதித்துள்ளது. இதன்படி அந் நிறுவனம் இரண்டாம் கலாண்டுப் பகுதியில் சுமார் 3.6 மில்லியன் ஸ்மார்ட் கடிகார விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

படம்
நாம் அனைவருமே ஒரு மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். இதே ஒரு மென்பொருள் இல்லை என்றால் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்,அதற்கு நேரம் ஆகலாம். அவ்வாறு இல்லாமல் Pen Drive, Memory Card, External Hard Disk என எதிலிருந்து வேண்டுமானாலும் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யாமல் இயக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் தானே. 

உலகமே உங்கள் அலுவலகமாக மாறவேண்டுமா? இதோ புதிய செயலி

படம்
அலுவலகம், வீடு தவிர பணியாற்றுவதற்குப் பொருத்தமான கச்சிதமான இடத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வழி காட்டும் செயலியாக ‘கியூப் ஃப்ரி’ உருவாகியிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் எங்கெல்லாம் பொதுப் பணியிடங்கள் அல்லது பகிர்வுப் பணியிடங்கள் இருக்கின்றன என்பதை இந்தச் செயலி வரைபடம் மூலம் சுட்டி