Xiaomi அறிமுகப்படுத்தும் MiPhone 3 ஸ்மார்ட் கைப்பேசி

Xiaomi எனும் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட MiPhone 3 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.
1.8GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய NVIDIA Tegra 4 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது, 16GB, 64GB சேமிப்பு நினைவகத்தினை உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.
16GB சேமிப்பு கொள்ளளவை உடைய கைப்பேசியின் விலையானது 327 டொலர்களாகவும், 64GB கொள்ளளவை உடைய கைப்பேசியின் விலை 408 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?