கேலக்ஸி நோட் 3 மற்றும் கியர் ஸ்மார்ட் வாட்ச்-ஐ வெளியிட்டது சாம்சங்

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தொடங்கியுள்ள சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சியில் கேலக்ஸி நோட் 3 மற்றும் கியர் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


பெர்லினில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சி நடப்பது வழக்கம். இதன்படி, ஐஎப்ஏ - 2013 கண்காட்சி நேற்று தொடங்கியது.

இந்த கண்காட்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் - 3 செல்போனையும், கியர் ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகம் செய்தது. இவை இரண்டிலும் பல்வேறு புதிய வசதிகளை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி நோட் - 3ல் பெரிய ஸ்கிரீன், எஸ் பென் வசதிகள் உள்ளன. இது தவிர ஒரே நேரத்தில் செயல்படக்கூடிய பல்வேறு வசதிகளும் உள்ளன என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?