SIGMO மொழிகளைக் கற்றுக்கொள்ள உதவும் நவீன சாதனம்
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும், மொழிகளை விளங்கிக்கொள்ள சிரமப்படுபவர்களுக்கும் உதவக்கூடிய வகையில் நவீன சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
SIGMO எனப்படும் இச்சாத
னமானது 25ற்கும் மேற்பட்ட மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது.
சிறிய அளவான SIGMO ஆனது மிகவும் விரைவான மொழிபெயர்ப்பு வசதியை தருவதுடன், இணைய இணைப்பு அற்ற(Offline) முறையில் செயற்படுகின்றது.
இதில் காணப்படும் முதலாவது பொத்தானை அழுத்தி ஒரு வசனத்தை பேசியவுடன் அதற்குரிய மொழிபெயர்ப்புடன் உச்சரிப்பினையும் தருகின்றது.
இரண்டாவது பொத்தானை அழுத்தினால் வெளிநாட்டு மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு, உச்சரிப்பை தரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.