அதிரடித் தொழில்நுட்பத்தில் அறிமுகமாகியது Oppo N1
Oppo நிறுவனமானது சில புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி Oppo N1 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
இது தவிர 1.7GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 600 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகிவற்றினை இக்கைப்பேசி உள்ளடக்கியுள்ளது.
இதில் உள்ள விசேட அம்சமாக 13 மெகாபிக்சல்களைக் கொண்ட ஒரே ஒரு கமெரா காணப்படுவதுடன் அதனை 360 டிகிரியில் திருப்பக்கூடியதாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த கமெராவினையே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவாகவும் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.
மேலும் கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படைகாகக் கொண்டுள்ளதுடன் 5.9 அங்குல
தொடுதிரை மற்றும் 16GB அல்லது 32GB சேமிப்பு வசதியும் தரப்பட்டுள்ளது.