ஐபோன் 6-ல் உள்ள பெரிய குறைபாடு!

பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 வெளியாகி வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மொடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு மொடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 கைப்பேசியின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் கைப்பேசியி
ன் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைப்பேசிகள் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது.
இந்த கைப்பேசிகள் மற்ற கைப்பேசிகளை விட 25 சதவீதம் வேகமாக இருக்கும். இந்த கைப்பேசிகள் வளைவான முனை கொண்டதாக இருக்கும்.
ஏராளமான சிறப்பம்சங்களுடன் வெளியான இந்த கைப்பேசியில் பெரிய குறைபாடு என்னவென்றால், இது வெகு எளிதில் வளைந்து விடுகிறது.
அதாவது, இதனை ஜீன்ஸ் பாக்கெட்டின் பின் பகுதியில் வைத்தால் கூடுதலாக வளைந்து விடுகிறது. முன் பகுதியில் வைத்தால் சிறிதளவில் வளைந்து விடுவதாக கூறப்படுகிறது.
மிக மெல்லிய உலோகத்தை பயன்படுத்தியிருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த ஐபோன் பல சிறப்பம்சங்கள் கொண்டிருந்தாலும் அது வளைவதே பெரும் குறைபாடாக உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?