பாஸ்வேர்டுகள் எப்படி இருக்க வேண்டும்?

நமது தகவல்களை பாதுகாப்பாக, ரகசியமாக வைக்க உதவுவது தான் பாஸ்வேர்ட்கள்.
நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால் நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.

அதனால் தான் பாதுகாப்பு என்றவுடனே, வலிமையான பாஸ்வேர்ட்கள் அமைக்க வேண்டும் என பல இடங்களிலும் எச்சரிக்கை செய்தி காட்டப்படும்.
* மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விரும்பும் நிறுவனங்கள், பாஸ்வேர்ட்டுகள் அமைக்கும் புரோகிராம்களை உபயோகப்படுத்தலாம்.
இதனை Random Password என அழைப்பதுண்டு, யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன.
* பாஸ்வேர்டில் கட்டாயம் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும்.
எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
* பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும்.
அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே.
* பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
இன்றைய கணனி பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?