Titan Aerospace நிறுவனத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டும் கூகுள்

சோலார் படலத்தில் இயங்கக்கூடிய சிறிய ரக (Solar Drone) விமானங்களை Titan Aerospace எனும் நிறுவனம் வடிவமைத்து வருகின்றது.
இந்நிறுவனத்தினை பேஸ்புக் நிறுவனம் வாங்கவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் கூகுள் நிறுவனமும் இந்த நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பேஸ்புக் நிறுவனம் 60 மில்லியன் டொலர்கள் செலுத்தி இந்நிறுவனத்தை வாங்க முனைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த நிறுவனத்தை வாங்குவது தொடர்பில் கூகுள் எவ்விதமான உத்தியோகபூர்வ தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?