குறைந்த விலையில் மடிக்கணனிகளை உருவாக்க கைகொடுக்கும் புதிய தொழில்நுட்பம்
கணனிகளின் மூளையாகக் கருதப்படும் CPU வடிவமைப்பில் முன்னணியில் திகழும் நிறுவனமாக Intel காணப்படுகின்றது.
இந்நிறுவனம் தற்போது நவீன தொழில்நுட்பத்தில் புதிய CPU ஒன்றினை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
Intel Braswell CPU என அழைக்கப்படும் இந்த துணைச்சாதனமானது குறைந்த மின்பாவனையைக் கொண்டுள்ளதுடன், விலையும் மிகக் குறைவாக இருக்கின்றது.
சீனாவை தளமாக கொண்டு செயற்படும் Intel நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் குழுவே இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அன்ரோயிட், விண்டோஸ் இயங்குதளங்களுக்கும் ஒத்திசைவாக்கம் கொண்ட இதன் பெறுமதியானது 99 டொலர்களாகும்.