அமேசான் நிறுவனத்தின் புத்தம் புதிய முயற்சி

Image result for amazon TrackRஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் வதியினை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் அமேசானும் ஒன்றாகும்.
இந் நிறுவனம் அதிகளவில் இலத்திரனியல் சாதனங்களையே விற்பனை செய்து வருகின்றது.
அத்துடன் சுய
மாகவே பல உப இலத்திரனியல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது.
இந் நிலையில் தற்போது ஒவ்வொருவருக்கும் உதவக்கூடிய நவீன ப்ளூடூத் கண்காணிப்பு சாதனம் ஒன்றினை வடிவமைக்கவுள்ளது.
இதன் ஊடாக சாவிகள், பணப் பை, பயண உடமைகளைக் கொண்ட பைகள் என்பவற்றினை மறந்து சென்றாலோ அல்லது தவற விட்டாலோ ஸ்மார்ட் கைப்பேசியில் எச்சரிக்கையினை பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்காக TrackR எனும் இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் இந்த திட்டத்திற்காக 250,000 தொடக்கம் 500,000 அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?