ஸ்மார்ட் கைப்பேசிகளில் புதிய தொழில்நுட்ப புரட்சி

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் உலக மக்களின் நன் நம்பிக்கை வென்ற நிறுவனங்களுள் LG நிறுவனமும் ஒன்றாகும்.
இந்த நிறுவனம் சமீப காலமாக தனது ஸ்மார்ட் கைப்பேசிகளில் புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி வருகின்றது.
இதன் மற்றுமொரு அம்சமாக கைவிரல் அடையாள (Finger Print) தொழில்நுட்ப
த்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இத் தொழில்நுட்பம் அப்பிள் மற்றும் சம்சுங் நிறுவனங்களில் கைப்பேசிகளில் ஏற்கனவே காணப்படுகின்றன.
எனினும் வழமைக்கு மாறாக கைப்பேசியின் தொடுதிரைக்கு கீழாக கைவிரல் அடையாள ஸ்கானரை வைக்க தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் நீரிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன், கீறல்கள் ஏற்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகின்றது.
குறித்த ஸ்கானர் ஆனது 0.01 அங்குல அளவுடையதாக காணப்படுகின்றது.
இந்த தகவலை LG Innotek நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான ongseok Park வெளியிட்டுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

அதிரடி சலுகையுடன் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பு

Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின