Moto G4 ஸ்மார்ட் கைப்பேசியின் வினோத அறிமுகம்

கைப்பேசிகள் பாவனைக்கு வந்த காலத்தில் கைப்பேசி உற்பத்தியில் கொடி கட்டிப்பறந்த நிறுவனங்களுள் மோட்டோரோலாவும் ஒன்றாகும்.
எனினும் அடுத்து வந்த காலப் பகுதியில் தோன்றிய புதிய நிறுவனங்கள், புதியதொழில் நுட்பங்கள் என்பவற்றிற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னடைவை சந்தித்தது.

ஆனாலும் அவ்வப்போது புதிய கைப்பேசிகளை அறிமுகம்செய்தே வந்தது.
இவ்வாறான நிலையில் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் இறங்கி மீண்டும் தனது இழந்த மார்க்கட்டை தூக்கி நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக Moto G4 எனும் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை இம் மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ள ஊடக நிகழ்வில் வெளியிடவுள்ளது.
இருந்தபோதும் தனது இந்திய டுவிட்டர் கணக்கினூடாக தற்போது டீசரினை வெளியிட்டுள்ளது.
இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனினும் இக் கைப்பேசி தொடர்பான ஏனைய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதேவேளை இதனுடன் Moto G4 Plus எனும் மற்றுமொரு கைப்பேசியினையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?