Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின


சாம்சுங் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் தற்போது உள்ள அனைத்து கைப்பேசிகளுக்கும் சவால்விடும் வகையில் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
எதிர்வரும் ஜுன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள Galaxy Note 6 எனும் குறித்த கைப்பேசியானது 5.8 அங்குல அளவு, 2560 x 1440 PixelResolution உடைய QHD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் செயல்பாட்டு வேகம் கூடிய Qualcomm Snapdragon 823 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இதன் பிரதான நினைவகத்தினை நோக்குகையில் இதுவரையில் எந்தவொரு ஸ்மார்ட் கைப்பேசியிலும் இல்லாதவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 4200 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவற்றிற்கு மேலாக நீர் உட்புகாத தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அப்பிளின் ஐபோன்களுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியின் விலைதொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?