பழைய இயங்குதளங்களுக்கான சேவையை நிறுத்தவுள்ளது கூகுள் குரோம்
உலகிலேயே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான சேயைானது பழைய இயங்குதளங்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு முதல் Windows XP, Vista , Mac 10.6, 10.7 மற்றும் 10.8 ஆகிய இயங்குதளங்களுக்கான சேவை நிறுத்தப்படவுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ் 10 இனை அறிமுகம் செய்யப்பட்டபின்னர் அதிகளவான கணினிகள் உட்பட மொபைல் சாதனங்களில் அவ் இயங்குதளம் பயன்பாட்டில் வந்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் புதிய இயங்குதளங்கள் ஊடான சேவையை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.