அதிகரிக்கும் ப்ளூடூத் தரவுப் பரிமாற்ற வேகம்
குறுகிய தூரங்களுக்குள் மொபைல் சாதனங்கள் ஊடாக வயர்லெஸ் முறையில் தரவுப் பரிமாற்றம் செய்வதில் ப்ளூடூத் ஆனது முக்கிய பங்கு வகிக்கின்றது.
தற்போது இதன் வேகத்தினை 100 சதவீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக Bluetooth Special Interest Group எனும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்ப
டவுள்ள இவ்வேக அதிகரிப்பு தொடர்பாக Bluetooth Special Interest Group அமைப்பின் தலைவர் Toby Nixon தெரிவிக்கையில் இத்திட்டத்திற்காக தற்போது 2 ட்ரில்லியன் டொலர்கள் ஒருக்கப்பட்டுள்ளதாகவும், ப்ளூடூத் தொடர்பான மேலதிக மேம்படுத்தல்களுக்காக 2025 ஆம் ஆண்டில் 11.1 ட்ரில்லியன் டொலர்கள் முதலீடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.