பேஸ்புக்கின் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்
சமூகவலைத்தளங்கள் வரிசையில் தொடர்ந்தும் முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய மொபைல் அப்பிளிக்கேஷனினை அறிமுகம் செய்துள்ளது.
Notify எனப்படும் இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் செய்திகள், காலநிலை என்பன உட்பட பல்வேறு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இதனைப் பயன்படுத்துபவர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் ஊடாக விளையாட்டு, திரைப்படங்கள், சொப்பிங், பாடல்கள், செய்திகள் போன்றவற்றின் அடிப்படையிலும் செய்திகளை உடனுக்கு உடன் பெற்றுக்கொள்ள முடியும்.