Android 6 வசதிக்கு மாறும் Moto X Style
மோட்டோரோலா நிறுவனம் தனது Moto x Style மொபைல் போன்களை Android 6க்கு தரம் உயர்த்திக்கொள்வதற்கான முதல்கட்ட முயற்சியை தொடங்கியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் மொபைல் சந்தையில் குறைந்த விலையில் முதன் முதலாக Android 5 வசதியை தனது Moto G மற்றும் X மொபைல்கள் மூலம் அறிமுகப்படுத்தியது.
தற்போது தனது Moto X Style மொபைல் போன்களை Android 6.0 Marshmallow வசதிக்கு தரம் உயர்த்திக்கொள்வதற்கான Updates வெளியிட்டுள்ளது.
இந்த வசதியை இந்தியா மற்றும் பிரேசில் நாட்டில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று அதன் Moto X (2nd gen) மற்றும் Moto X Pure மொடல்களுக்கான அப்டேட்களையும் வெளியிட்டுள்ளது. இதை பிரேசில் நாட்டில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதன் மூலம் மொபைலின் திறன், பாட்டரி செயல்படும் நேரம், App Permission போன்றவற்றை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மோட்டோரோலா நிறுவனத்தின் உயர் அதிகாரியான David Schuster தனது கூகுள் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.