ஸ்மார்ட்போன்களின் சந்தையில் சாம்சுங் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் மற்ற நிறுவனங்கள் சந்தையை கைப்பற்றும் போட்டியில் வேகமாக முன்னேற அதற்கு தக்க பதிலடியாக தனது Galaxy S6 Edge plus கைப்பேசியைஅறிமுகம் செய்துள்ளது.
பிரமாண்டமான 5.7 இன்ச் தொடுதிரையுடன் அறி
முகமாகியுள்ள இந்த கைப்பேசி மேலும் பல வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.
இதன் 4 ஜிபி ராம் மூலம் பல்வேறு அப்ளிகேசனையும் கண்ணிமைக்கு வேகத்தில் நாம் இயக்க முடியும்.
ஆண்ட்ராய்ட் 5.1(Lollipop) வசதியும் இதற்கு துணை புரிகிறது. மேலும் இதன் 16 மெகாபிக்சல் பின்பக்க கமெரா மூலம் துள்ளியமான காட்சிகளை பெறலாம்.
செல்பிக்கு என்றே 5 மெகாபிக்சல் முன்பக்க கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 4k எனப்படும் மிக துள்ளியமான வீடியோக்களை நாம் எடுக்கமுடியும்.
மேலும் எடுத்த உடனேயே நொடிப்பொழுதில் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யும் வசதியும், அதிகமான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமிக்கும் வகையில் 32 ஜிபி மெமரியும் கைப்பேசியுடனேயே வழங்கப்பட்டுள்ளது.
இதன் விலை 57, 900 ரூபாய் ஆகும். Galaxy S6 Edge plus கைப்பேசி ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.