காயங்கள் எப்படி குணமாகிறது! சொல்கிறது ஸ்மார்ட் பண்டேஜ்
தோலில் உண்டாகும் எரிகாயங்கள் மற்றும் ஏனைய காயங்கள் குணப்படும் விதம் உட்பட அப்பகுதியில் ஒட்சிசன் மட்டம் அதிகரித்தல் என்பவற்றினை எடுத்துக்காட்டும் ஸ்மார்ட் பண்டேஜ் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக குறித்த பகுதியில் விசேட சாதனம் ஒன்றின் மூலம் பளீச்சிட்டு ஒளி (Flash Lihgt) செலுத்தப்படும், இதன்போது பண்டேஜில் பட்டு தெறிக்கும் ஒளியை பளீச்சிட்ட சாதனத்தில் உள்ள பொஸ்பரஸ் துணிக்கைகள் உறுஞ்சி பதித்துக்கொள்ளு
ம்.
இதன்போது காயப்பட்ட இழையப்பகுதியில் ஒட்சிசன் மட்டம் குறைந்திருந்தால் பொஸ்பரஸ் துணிக்கைகளில் வெளிச்சம் கூடிய தன்மை காணப்படும்.
இதனை வெற்றுக்கண்ணினால் அவதானிக்க முடியாது. எனவே அவதானிப்பதற்கு புளோரோசென்ட் திரை பயன்படுத்தப்படும்.