Asus அறிமுகம் செய்யும் புதிய டேப்லட்
முன்னணி மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமான Asus ஆனது VivoTab எனும் Windows 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்டினை இந்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
199 டொலர்கள் மட்டுமே பெறுமதியான இந்த டேப்லட் ஆனது 8 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் Intel Atom Z3745 Bay Trail Quad-Core Processor பிரதான நினைவகமாக 2GB RAM சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவு என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர தலா 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பிற்கான கமெரா, பிரதான கமெரா என்பவற்றினையும், 8 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.