உங்க ஆண்டிராய்டு போன்ல மெமரி பத்தலயா?

ஆண்டிராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு பெரும் கவலை தரும் விடயமாக இருப்பது மெமரி.
பலரும் என்னடா..அதற்குள் போன்ல மெமரி முடிந்து பேச்சே என புலம்புவர்.
உடனே போனில் இருக்கும் சில முக்கிய பைல்களை கணனிக்கு மாற்ற முயற்சிப்போம். அவ்வாறு ஆண்டிராய்டு போன்லில் இருந்து கணனிக்கு மாற்ற பல வழிகள் உள்ளன.

யுஎஸ்பி(USB)
யுஎஸ்பி முறையில் மொபைல் போனில் உள்ள சில முக்கிய பைல்களை கணனிக்கு மாற்றுவது அனைவரும் தெரிந்த ஒன்றே. இதுவே தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் முறையாகும். இந்த முறையில் சிறிய யுஎஸ்பி கேபிளை கணனியுடன் இணைத்து பைல்களை சேமித்துக் கொள்ளலாம்.
ப்ரவுஸர்(Browser)
உங்க கணனி மற்றும் ஆண்டிராய்டு போனும் ஒரே வைபை மூலம் இணைந்திருந்தால் இந்த முறையை பயன்படுத்தி தகவல்களை பறிமாற்றி கொள்ள முடியும்.
இஎஸ் பைல் எக்ஸ்ப்லோரர்(ES File Explorer)
உங்கள் ஆண்டிராய்டு டிவஸை விண்டோசில் இருக்கும் ஷேர்டு போல்டர் மூலமும் டேட்டாக்களை பறிமாற்றம் செய்ய முடியும்.
வைபை(Wi-Fi)
எஸ்எம்பி (SMB) சர்வர் மூலம் வைபை வசதி கொண்ட எல்லா கணனியையும் ஆன்டிராய்டு போன் மூலம் இனைக்க முடியும். பொதுவாக எஸ்எம்பி சர்வருடன் இணைக்க பல ஆன்டிராய்டு அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றது.
சின்க்ரனைஸ்(Synchronous)
உங்கள் ஆன்டிராய்டு போனில் இருக்கும் தகவல்களை எளிதாக கணனியுடன் இணைத்து பைல் பறிமாற்றத்திற்கு இந்த முறை உதவுகிறது.
க்ளவுட் ஸ்டோரேஜ்(Cloud Storage)
ட்ராப் பாக்ஸ் அல்லது ஸ்கை டிரைவ் மூலமாகவும் தவல்களை பறிமாற முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem