பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் சூப்பரான செய்தி
சமூக வலைத்தளங்கள் வரிசையில் தொடர்ந்தும் தன்னை முதன்மையாக நிறுத்திக் கொள்வதற்கு பேஸ்புக் நிறுவனம் தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது.
இவ்வாறான செயற்பாட்டின் ஒரு அங்கமாக சில
வாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் குழுக்களில் உள்ளவர்கள் தம்மிடையே குரல் வழி அழைப்பினை(Group Voice Calling) ஏற்படுத்தக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
எனினும் இவ் வசதி குறிப்பிட்ட சிலநாடுகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்தது.
ஆனால் தற்போது அனைத்து நாடுகளிலும்உள்ள பேஸ்புக் பயனர்கள் இவ் வசதியினை பெற்றுக் கொள்ளமுடியும்.
அத்துடன் குழுவில் உள்ளவர்களில் உச்ச பட்சமாக 50 பேர்வரை இந்த அழைப்பில் ஒரே நேரத்தில் இணைந்துகொள்ள முடியும்.
இந்த தகவலை பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் David Marcus என்பவர் தெரிவித்துள்ளார்.
இவ் வசதி கிடைக்கப் பெறாதவர்கள் தமது பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை Update செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.