விண்டோஸ் மொபைல் சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி
கூகுளின் Android, அப்பிளின் iOS இயங்குதளங்களுக்கு அடுத்தபடியாக மைக்ரோசொப்ட்டின் Windows 10Mobile இயங்குதளம் அதிக மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு Windows 10 Mobile இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புகைப்படங்கள், குறு வீடியோக்கள் எ
ன்பனவற்றினை குடும்பத்தவர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ உதவும் தளமாகஇன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.
குறுகியகாலத்தில் பல பயனர்களை தன்வசமாக்கியுள்ள இச் சேவையானது தற்போது400 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது.
இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன் ஆனது iOS, Android சாதனங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விண்டோஸ் ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியும்.