ஹேம் பிரியர்களை குஷிப்படுத்த வருகிறது Angry Birds Action
ஆனால் இவர்களையும் தாண்டி வயது வேறுபாடுஇன்றி அனைவரையும் கவரக்கூடிய கணணி கேம்களும் அவ்வப்போதுஉருவாக்கப்படுகின்றன.
அப்படியானஒரு ஹேமே Angry Birds ஆகும்.
சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இக் ஹேமானது பட்டி தொட்டி எங்கும் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதன் காரணமாக தொடர்ச்சியாக பலபதிப்புக்கள் வெளியிடப்பட்டு வந்தது.
இவ்வாறானநிலையில் Angry BirdsAction எனும் மற்றுமொரு பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும்மே மாதம் Angry Birds தொடர்பான திரைப்படம் ஒன்று வெளியாகவுள்ள நிலையில் இப் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டமை முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.