உங்களது ஆன்டிராய்டு செயலிகளை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க

அழைப்புகளை மேற்கொள்ளவோ அல்லது இன்டர்நெட் பயன்படுத்தவோ மற்றவர்களிடம் உங்களது போனை கொடுக்கும் போது அனைவரும் நாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்று நினைக்க கூடாது. மொபைலை பயன்படுத்துபவர்களில் சிலர் உங்களது தனிப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ள நினைப்பர். சிலர் உங்களது குறுந்தகவல்களையும் படிக்கலாம், இதை தடுப்பது எப்படி என்பதை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். 

பொதுவாக ஸ்மார்ட்போனை நீங்கள் லாக் செய்திருந்தாலும் அதனை மற்றவர்களிடம் கொடுக்கும் போது லாக் எடுத்து தான் கொடுக்கின்றீர்கள். இவ்வாறு செய்யும் போது அவர்கள் மற்ற செயலிகளை பயன்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது. இதனை தடுக்க குறிப்பிட்ட சில செயலிகளை மட்டும் லாக் செய்ய முடியும். ஆன்டிராய்டு போனில் தேர்வு செய்யப்பட்டசெயலிகளை மட்டும் லாக் செய்வது எப்படி என்று பாருங்கள்..
                                   
முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஸ்மார்ட்ஆப்லாக் என்ற செயலியை டவுன்லோடு செய்யுங்கள்.

முதலில் செயலியை பயன்படுத்தும் போது பாஸ்வேர்டு செட் செய்ய வேண்டும், டீபால்ட் பாஸ்வேர்டு 7777, இதனை நீங்கள் பாஸ்வேர்டு ஹின்ட் ஸ்கிரீனில் பார்க்க முடியும். அந்த நம்பர்களை க்ளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது ஆப் லாக் டேப் ஓபன் ஆகும்.

அடுத்து கீழ் பகுதியில் இருக்கும் பச்சை+ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

இங்கு உங்களுக்கு லாக் செய்ய வேண்டிய செயலிகளை தேர்வு செய்து அதற்கான பாஸ்வேர்டுகளையும் குறிப்பிடுங்கள்.

அடுத்து ADD என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

ஒவ்வொரு செயலியிலும் FAKE என்று தெரியும். இந்த பட்டனை க்ளிக் செய்து ஃபேக் ஆப் க்ராஷ் மெசேஜ் சேவையை எனேபிள் செய்து கொள்ளலாம்.

இனி லாக் செய்த செயலிகளை ஓபன் செய்யும் போது "Unfortunately, WhatsApp has stopped." என்ற தகவல் ஸ்கிரீனில் தெரியும். இவ்வாறு வரும் போது OK என்ற பட்டனை க்ளிக் செய்தால் மீண்டும் ஹோம் ஸ்கிரீன் தான் ஓபன் ஆகும்.

ஆனால் ஓகே பட்டனை அழுத்தி பிடித்தால் பாஸ்வேர்டு என்டர் செய்ய வேண்டும் என்ற ஸ்கிரீன் தெரியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3