வாட்ஸ் அப் மெசேஜால் காத்திருக்கும் பேராபத்து!

Image result for whatsappவாட்ஸ் அப்பில் வரும் ஆவணங்கள் இணைக்கப்பட்டு மெசேஜை திறந்த படிப்பதின் மூலம் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் இதுபோன்ற பிரபல மொபைல் அப்களின் மூலம் பேனில் வைரஸ்களை பரப்பி நமது தனிப்பட்ட தகவல்களை திருடிவருகின்றனர்.
சமீபத்தில் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ், இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு
களை குறி வைத்து இது போன்ற மெசேஜ்கள் அனுப்படுகிறது.
இந்த மெசேஜ்கள் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து வருவது போல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மெசேஜின் ஆவணத்தை திறப்பதின் மூலம், போனில் வைரஸ் எளிதாக நுழைந்து விடும். இது நடந்தால் நமது தனிப்பட்ட விவரங்கள், வங்கி விவரங்கள் எளிதாக திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ஆண்ட்ராய்டு போனிகளிலே இந்த பிரச்சனை அதிகமாக தோன்றுகிறது. தனிப்பட்ட விவரங்களை ஹேக் செய்யும் குற்றவாளிகள், இதன் மூலம் முக்கிய தகவல்கள் மற்றும் பணத்தை திருடுகின்றனர்.
இதுபோன்று வரும் சந்தேகத்திற்குரிய மெசேஜ்களை மக்கள் திறந்து பார்க்காமல் தவிர்க்குமாறு பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மேலும், இதற்காக வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய பாதுகாப்பான வசதியை பயன்படுத்தி ஆவணங்களை பகிர்ந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?