ப்ளே ஸ்டோரில் உள்ள போலி ஆப்ஸ்களை கண்டுபிடிக்க சூப்பர் ஐடியா இதோ!

Image result for playstoreஉலகமே ஸ்மார்ட் போன்கள் யுகமாக மாறிவிட்டது என கூறினால் அது மிகையாகாது. ஸ்மார்ட்போன்களில் செய்தி, கேம்ஸ், இசை, வீடியோ என எல்லாவற்றையும் உபயோகப்படுத்த எதாவது ஒரு ஆப்ஸ்கள் தேவைப்படுகிறது.
ஒரே பெயரில் பல ஆப்ஸ்கள் உள்ளதால் எது உண்மை, எது போலி என கண்டுபிடிக்க பலர் சிரமபடுகின்றனர்.

அதை கண்டுபிடிக்க சில எளிய வழிமுறைகள்
Developerன் பெயர்கள்
எந்தவொரு ஆப்ஸையும் பதிவிறக்கம் செய்யும் முன்னர், அந்த ஆப்ஸ் கீழே அதை டெவலப் செய்த நிறுவனத்தின் பெயர் இருக்கும். அதை வைத்து அது அந்த நிறுவனத்தின் ஆப்ஸ் தானா என கண்டறியலாம்.
பதிவிறக்க எண்ணிக்கை
என்ன தான் போலி அப்ஸ்கள் நிஜ ஆப்ஸ் பெயரில் இருந்தாலும், உண்மையான ஆப்ஸ்களை தான் அதிகம் பேர் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்திருப்பார்கள். அதன்படி எது அதிக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதோ அது தான் உண்மையான ஆப்ஸ் ஆகும்.
கூகுள் எடிட்டர் சாய்ஸ்
மிக பிரபலமான நிறுவனங்கள் வெளியிடும் ஆப்ஸ்களுக்கு மட்டுமே கூகுள் எடிட்டர்கள் அங்கீகாரம் தருவார்கள். நாம் தேடும் ஆப்ஸில் அது இருக்கிறதா என பார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.
ஆப்ஸ் லோகோ புகைப்படம்
எந்தவொரு ஆப்ஸ்களை நாம் பதிவிறக்கம் செய்தாலும், முதலில் நம் கண்களில் படுவது அதன் லோகோ படம் தான். அதை அவ்வளவு எளிதாக போலி ஆப்ஸ் நிறுவனங்கள் தயாரிக்க முடியாது.
Review மதிப்பெண்கள்
எல்லா ஆப்ஸ்கள் கீழேயும் அதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் தரத்தை பற்றி கூற ரேட்டிங்ஸ் மற்றும் ரிவ்யூ இருக்கும். அதில் அதிகம் பேர் பங்கேற்று தங்கள் மதிபெண்களை கொடுத்திருந்தால் அது போலி கிடையாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?