உலகிலே அதிக மெமரி கொண்ட ஃப்ளாஷ் டிரைவ் அறிமுகம்...எவ்வளவு மெமரி தெரியுமா?

Image result for 2000 gb pendrive kingstonஉலகின் அதிக மெமரி கொண்ட யுஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவை கிங்ஸ்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கிங்ஸ்டன் நிறுவனம் 2000GB டேட்டா டிராவெல்லர் GT ஃபிளாஷ் டிரைவ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஃப்ளாஷ் டிரைவ் ஆனது உலகிலேயே அதிக
ளவு மெமரி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஃப்ளாஷ் டிரைவ் வருகிற பிப்ரவரி மாதம் சந்தையில் விற்பனைக்கு வரும் என்றும் அதன் விலை குறித்து இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் த்கவல் வெளியாகியுள்ளது.
இந்த கிங்ஸ்டன் ஃபிளாஷ் டிரைவ் 72mmx26.94mmx21mm அளவு கொண்டுள்ளது.
மேலும், டேட்டா டிராவெல்லர் அல்டிமேட் GT ஃபிளாஷ் டிரைவ் யுஎஸ்பி 3.1 தொழில்நுட்பத்தோடு சின்க்-அலாய் மெட்டல் பாடி கொண்டுள்ளதால் ஷாக் ரெசிஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகும் மடிக் கணனிகளிலேயே இவ்வளவு மெமரி வழங்கப்படாத நிலையில் கிங்ஸ்டன் அறிமுகம் செய்துள்ள புதிய ஃபிளாஷ் டிரைவ்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, கிங்ஸ்டன் நிறுவனத்தின் வியாபார பிரிவு மேலாளர் ஜீன் வோங் கூறியதாவது, முன்னதாக எங்கள் நிறுவனம் அறிமுகம் செய்த 1000GB அளவுடைய யுஎஸ்பி டிரைவ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இந்த புதிய சாதனத்தில் மெமரி அளவை இருமடங்கு அதிகரித்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?