ஜிமெயிலை PDF கோப்பாக மாற்றி சேமிக்க

கூகிளின் மிக முக்கிய சேவையான ஜிமெயில் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதே இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.மேலும் புத்தம் புதிய வசதிகளையும், அதிக மின்னஞ்சல்களை சேமிக்கும் வசதி மற்றும் விரைவான சேவையை கொடுப்பதாலேயே உலகின் மிகப் பலரும் ஜிமெயிலைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இத்தகைய சிறப்பு மிக்க வசதியைக்கொண்ட ஜிமெயில் முகவரிக்கு வந்து சேரும் மின்னஞ்சல்களை நம்முடைய வசதிக்கு தகுந்தபடி PDF கோப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும்.

Gmail களுக்கு வரும் மின்னஞ்சல்களை PDF கோப்புகளாக மாற்றுவதற்கு நீட்சிகள், புரோகிராம்கள் இருப்பினும் இந்த வசதியை நேரடியாக ஜிமெயிலில் பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

ஜிமெயில் நேரடியாக PDF கோப்பாக மாற்ற...

1. உங்கள் ஜிமெயிலில் உள்நுழைந்து கொள்ளுங்கள்.
2. PDF கோப்பாக மாற்ற வேண்டிய மின்னஞ்சலைத் திறந்துகொள்ளுங்கள்.
3. பிறகு Print all ஐகானை கிளிக் செய்யுங்கள்...
4. அங்கு தோன்றும் பக்கத்தில் Change என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. தோன்றும் பக்கத்தில் Save as PDF என்பதை கிளிக் செய்யுங்கள்..
6. உடனே தோன்றும் பக்கத்தில் Save என்பதை கிளிக் செய்யுங்கள்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

அதிரடி சலுகையுடன் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பு

Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின