அறிமுகமாகின்றது குழந்தைகளுக்கான நவீன ரக டேப்லட்
கூகுளின் பிந்திய இயங்குதளப்பதிப்பான Android 4.4 இல் இயங்கக்கூடிய Nabi Jr Tablet எனும் குழந்தைகளுக்கான புதிய டேப்லட் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
270 டொலர்கள் பெறுமதியான இந்த டேப்லட்டில் Tegra 3 Processor, பிரதான நினைவமாக 2GB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 16GB தரப்பட்டுள்ளது.
மேலும் 8 அங்குல அளவு, 1920 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட்டில் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.