குறைந்த விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட் பேண்ட்
Razer நிறுவனம் தனது Razer Nabu எனும் புதிய ஸ்மார்ட் பேண்ட்டினை எதிர்வரும் இரு மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.
முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இதன் விலை 100 டொலர்கள் என Raze
r நிறுவனத்தின் தலைமை அதிகாரி Min-Liang Tan தெரிவித்துள்ளார்.
Android மற்றும் iOS சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய இச்சாதனத்தில் Twitter, Google Maps, Instagram மற்றும் Facebook அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.
128 x 32 Pixel Resoluton உடையதும் OLED தொழில்நுட்பத்தினை உடையதுமான திரையினைக் கொண்டுள்ளது.
இதிலுள்ள மின்கலமானது ஒருமுறை சார்ஜ் செய்த பின்னர் 5 தொடக்கம் 7 நாட்கள் வரை பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.