ஃப்ளாப்பி பேர்ட் விளையாட்டு மூலமாக ஆண்ட்ராய்டு வைரஸ்

மொபைல் விளையாட்டு சேவையான ஃப்ளாப்பி பேர்ட் சேவை அகற்றப்பட்டுள்ள நிலையில், அதன் போலி வடிவங்கள் பரவுவதால் ஆண்ட்ராய்டு மொபைல்களில் வைரஸ் ஏற்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.



பிரபல மொபைல் விளையாட்டான ஃப்ளாப்பி பேர்ட்டை இதுவரை ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்கள் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் இந்த சேவையை அதன் உரிமையாளர் நிறுத்திக்கொண்டார். அதனால் போலி ஃப்ளாப்பி பேர்ட் விளையாட்டுகள் உருவாகியுள்ளன. இந்த விளையாட்டின் மீதான மோகம் காரணமாக போலிகளையும் வாடிக்கையாளர்கள் டவுன்லோட் செய்கிறார்கள். அவற்றால் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக மொபைல் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய போலி ஃப்ளாப்பி பேர்ட் விளையாட்டுகளை டவுன்லோட் செய்வதன் மூலம் அவற்றால் வைரஸ்கள் பரவி, ஸ்மார்ட் போன்களில் இருந்து அடிக்கடி பயன்படுத்தப்படும் எண்களுக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்படுவதாகவும், அதனால் தேவையற்ற பண விரயம் ஏற்படுவதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேலும், உண்மையில் ஃப்ளாப்பி பேர்ட் விளையாட்டு சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், அதனால் போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் ஆய்வாளர்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?