கூகுள் குரோமின் புதிய பதிப்பில் அதிரடி வசதி

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இணைய உலாவியான கூகுள் குரோமின் 45 வது பதிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இப்புதிய பதிப்பில் பல மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், முக்கியமாக பயன்படுத்தப்படாத டேப்களிற்கான (Tabs) மெமரி பயன்பாட்டினை தானாகவே
குறைத்துக்கொள்ளக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் மின்கலத்தின் பாவனைக் காலத்தினை அதிகரிக்க முடிவதுடன், விரைவான இணைய உலாவலை மேற்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தகவல்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளதுடன் குரோம் 43 மற்றும் குரோம் 45 ஆகிய இரு இணைய உலாவிகளுக்கும் இடையிலான வேறுபாட்டினை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem