கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனம் தனது iPhone 6 உடன் iOS 8 இயங்குதளத்தினையும் அறிமுகம் செய்திருந்தது.
எனினும் இப்பதிப்பில் சில குறைபாடுகள் காணப்பட்டமையினால் உடனடியாகவே அவற்றினை திருத்தம் செய்து iOS 8.0.2 பதிப்பினை வெளியிட்டுள்ளது.
iOS 8 பதிப்பில் கீபோர்ட்டினை பயன்படு
த்துவதில் சிரமம் காணப்பட்டதுடன், புகைப்படங்களை கையாள்வதிலும் சிக்கல்கள் காணப்பட்டுள்ளன. தற்போது இவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
பயனர்கள் தரவிறக்கம் செய்து தமது மொபைல் சாதனங்களில் நிறுவிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|