Vlambeer நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களுக்கான புதிய Ridiculous Fishing எனும் ஹேமினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் இந்த ஹேம் ஆனது அப்பிளின் iOS சாதனங்களுக்காக ஏற்கணவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 1 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 300,000 நகல்கள்
விற்பனையாகியுள்ளன என கடந்த ஓகஸ்ட் மாதம் ஐரோப்பாவில் இடம்பெற்ற ஹேம் வடிவமைப்பாளர்களுக்கான மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விண்டோஸ் 8 இயங்குதளத்திற்காக இந்த ஹேமினை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
|